செய்திகள்
அமைச்சர் கேசி கருப்பணன்

தமிழகத்தில் பிளாஸ்டிக் பொருட்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளே இல்லை- அமைச்சர் பேட்டி

Published On 2020-06-30 09:28 GMT   |   Update On 2020-06-30 09:51 GMT
தமிழகத்தில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளே இல்லை என்று அமைச்சர் கே.சி.கருப்பணன் கூறியுள்ளார்.
அம்மாபேட்டை:

அம்மாபேட்டை அருகே ஊமாரெட்டியூரில் நடந்த நிகழ்ச்சியில் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

தமிழகத்தில் மருத்துவம், உள்ளாட்சி, காவல் என்று துறைகளை ஒருங்கிணைந்து சிறந்த முறையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கொரோனா தடுப்பு மற்றும் ஒழிப்பு பணியை மேற்கொண்டு வருகிறார். தமிழகத்தில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் உற்பத்தி செய்யும் நிறுவனம் மீது என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது என்பது குறித்து தென் மண்டல பசுமை தீர்ப்பாயம் கேட்டுள்ளது. தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை உற்பத்தி செய்யும் நிறுவனமே தமிழகத்தில் இல்லை என உறுதியாக தெரிவிக்கிறேன். அந்த தொழிலுக்கு பதிலாக மாற்று தொழிலை செய்து கொள்ளுமாறு அரசின் சார்பில் அறிவுறுத்தப்பட்டு உதவிகள் செய்யப்பட்டன.

இவ்வாறு அமைச்சர் கே.சி.கருப்பணன் கூறினார்.
Tags:    

Similar News