செய்திகள்
கொரோனா வார்டில் கண்காணிப்பு அதிகாரி ஆய்வு செய்தபோது எடுத்தபடம்.

மயிலாடுதுறை அரசு மருத்துவமனை கொரோனா வார்டில் கண்காணிப்பு அதிகாரி ஆய்வு

Published On 2020-06-28 16:34 IST   |   Update On 2020-06-28 16:34:00 IST
மயிலாடுதுறை அரசு மருத்துவமனை கொரோனா வார்டில் கண்காணிப்பு அதிகாரி முனியநாதன் ஆய்வு மேற்கொண்டார்.
குத்தாலம்:

நாகை மாவட்டம் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கான கண்காணிப்பு அதிகாரியும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை முதன்மை செயலாளருமான சி.முனியநாதன், மயிலாடுதுறை அரசு மருத்துவமனை கொரோனா வார்டில் ஆய்வு செய்தார். அப்போது மருத்துவமனையில் சுகாதாரத்துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள ஏற்பாடுகளை பார்வையிட்டார்.

மருத்துவமனைக்கு வரும் பொதுமக்களுக்கு உடல் வெப்ப நிலை பரிசோதனை மற்றும் ஆரம்ப கட்ட அறிகுறிகளுக்கான பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுவதையும் பார்வையிட்டார்.

கொரோனா வார்டில் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகள், வழங்கப்படும் உணவு வகைகள் உள்ளிட்ட விவரங்கள் குறித்தும் டாக்டர்களை கேட்டறிந்தார். கொரோனா பரிசோதனைக்காக அமைக்கப்பட்டுள்ள ஆய்வகத்தையும் அவர் பார்வையிட்டார். தொடர்ந்து மயிலாடுதுறை ஏ.வி.சி. கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தும் முகாமிற்கு சென்று ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின்போது மாவட்ட கலெக்டர் பிரவீன்நாயர், மருத்துவ பணிகள் இணை இயக்குனர் மகேந்திரன், மயிலாடுதுறை அரசு மருத்துவமனை மருத்துவ அலுவலர் ராஜசேகரன் ஆகியோர் உடன் இருந்தனர்.

Similar News