செய்திகள்
வெட்டுக்கிளி

நெடுவாசல் பகுதியில் காணப்பட்ட வெட்டுக்கிளியால் விவசாயிகள் அச்சம்

Published On 2020-06-26 11:51 GMT   |   Update On 2020-06-26 11:51 GMT
நெடுவாசல் கிழக்கு கிராமத்தில் ஒரு வெட்டுக்கிளியை பார்த்து விவசாயிகள் அச்சப்பட்டனர். இதையறிந்த கீரமங்கலம் பகுதி உதவி வேளாண்மை அலுவலர் ஆய்வு செய்தார்.
கீரமங்கலம்:

வடமாநிலங்களில் வெட்டுக்கிளிகள் படையெடுத்து வந்து சில மணி நேரங்களில் வயல்களில் உள்ள பயிர்களை நாசம் செய்தன. இந்நிலையில் நேற்று நெடுவாசல் கிழக்கு கிராமத்தில் ஒரு வெட்டுக்கிளியை பார்த்து விவசாயிகள் அச்சப்பட்டனர்.

இதையறிந்த கீரமங்கலம் பகுதி உதவி வேளாண்மை அலுவலர் பெரியசாமி உள்ளிட்ட அலுவலர்கள் சம்பந்தப்பட்ட இடத்திற்கு சென்று ஆய்வு செய்தனர். அந்த பகுதியில் ஒரு வெட்டுக்கிளி மட்டுமே காணப்பட்டது. வேறு வெட்டுக்கிளிகள் காணப்படவில்லை. இதையடுத்து அதிகாரிகள் விவசாயிகளிடம், கீரமங்கலம் பகுதியில் வழக்கமாக காணப்படுகிற வெட்டுக்கிளி தான் நெடுவாசலில் காணப்பட்டது. இதனால் எந்த பாதிப்பும் வராது, என்றனர்.
Tags:    

Similar News