செய்திகள்
புதிய வகை பேரீச்சம் பழம்

புதிய வகை பேரீச்சம் பழம் விற்பனை- ஆர்வத்துடன் வாங்கி சென்ற பொதுமக்கள்

Published On 2020-06-26 16:34 IST   |   Update On 2020-06-26 16:34:00 IST
புதுக்கோட்டையில் புதிய வகை பேரீச்சம் பழத்தை பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர்.
புதுக்கோட்டை:

புதுக்கோட்டையில் சிவப்பு நிற பேரீச்சம் பழம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பழைய பஸ் நிலையம், பிருந்தாவன் முக்கம், கலெக்டர் அலுவலக ரவுண்டானா உள்பட பல இடங்களில் பேரீச்சம் பழ விற்பனை நடைபெறுகிறது. இது குறித்து வியாபாரி ஒருவர் கூறுகையில், சாதாரணமாக கடைகளில் கருப்பு மற்றும் பழுப்பு நிறத்தில் தான் பேரீச்சம் பழம் பார்த்திருக்கிறோம். அது பதப்படுத்தப்பட்ட பேரீச்சம் பழம் ஆகும். ஆனால் சிவப்பு மற்றும் மஞ்சள் நிறத்தில் உள்ள பேரீச்சம் பழம் பதப்படுத்தப்படாதது ஆகும். இந்த பேரீச்சையில் பொட்டாசியம், கால்சியம், பாஸ்பரஸ் போன்றவை அதிகம் இருக்கின்றன. எனவே இது எலும்புகளுக்கு உறுதி ஏற்படுத்தும்.

இந்த சிவப்பு பேரீச்சை பெங்களூருவில் இருந்து வாங்கி வரப்பட்டு, இங்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த பழம் ஒரு கிலோ ரூ.200-க்கு விற்பனை செய்யப்படுகிறது, என்றார். வித்தியாசமாக இருப்பதை பார்த்து இந்த பழத்தை பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர்.

Similar News