செய்திகள்
கொரோனா வைரஸ்

புதுச்சேரியில் ஒரேநாளில் 31 பேருக்கு கொரோனா

Published On 2020-06-26 10:51 IST   |   Update On 2020-06-26 10:51:00 IST
புதுச்சேரியில் ஒரேநாளில் 31 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டதால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 531ஆக உயர்ந்துள்ளது.
புதுச்சேரி:

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு 5 லட்சத்தை நெருங்கும் நிலையில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15 ஆயிரத்தை கடந்துள்ளது

அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 1,47,741 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் 70,977 பேருக்கும், டெல்லியில் 73,780 பேருக்கும், குஜராத்தில் 29,520 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், புதுச்சேரியில் ஒரேநாளில் 31 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 533 ஆக உயர்ந்துள்ளது. 

Similar News