செய்திகள்
பஸ்கள் (கோப்புப்படம்)

கையுறை அணிவதால் டிக்கெட் கொடுப்பது சிரமமாக இருக்கிறது- பஸ் கண்டக்டர்கள்

Published On 2020-06-01 08:33 GMT   |   Update On 2020-06-01 09:08 GMT
கையுறை அணிந்து இருப்பதால் டிக்கெட் கிழிக்கும் போது 2, 3 டிக்கெட்டுகள் சேர்ந்து வந்து விடுவதால் சிரமமாக இருக்கிறது என்று அரசு பஸ் கண்டக்டர்கள் தெரிவித்தனர்.

பவானி:

பவானி புதிய பஸ் நிலையத்தில் இருந்து இன்று ஈரோடு, சத்தி, ஆப்பக்கூடல், அத்தாணி, மேட்டூர், சேலம், குமாரபாளையம் ஆகிய பகுதிகளுக்கு அரசு பஸ்கள் இயக்கப்பட்டது.

டிரைவர்கள் முக கவசம் மற்றும் கையுறை அணிந்து பஸ்களை ஓட்டி சென்றனர். கண்டக்டர்கள் மின்னணு டிக்கெட் கொடுக்கும் கருவி இல்லாதால் பெரும்பாலான கண்டக்டர்கள் கையில் டிக்கெட் கிழித்து கொடுத்தனர்.

அவர்கள் கையுறை அணிந்து இருப்பதால் டிக்கெட் கிழிக்கும் போது 2, 3 டிக்கெட்டுகள் சேர்ந்து வந்து விடுவதால் சிரமமாக இருக்கிறது என்றனர். அதனால் சிலர் கையுறை அணியாமல் டிக்கெட் கொடுப்பதாகவும் தெரிவித்தனர்.

மின்னணு டிக்கெட் கொடுக்கும் கருவி இருந்தால் நன்றாக இருக்கும். மேலும் கையுறை அணிந்து டிக்கெட் கொடுப்பதில் சிரமம் இருக்காது என்றனர்.

பவானி பணிமனையில் இருந்து இன்று 28 அரசு பஸ்கள் இயக்கப்பட்டது.

Tags:    

Similar News