செய்திகள்
முக கவசம்

நங்கநல்லூரில் முக கவசம் அணியாமல் வந்தவர்களுக்கு ரூ.100 அபராதம்

Published On 2020-04-25 12:57 IST   |   Update On 2020-04-25 12:57:00 IST
நங்கநல்லூரில் முக கவசம் அணியாமல் வந்தவர்களுக்கு ரூ.100 அபராதம் விதிக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.
ஆலந்தூர்:

சென்னை மாநகராட்சி பகுதியில் கொரோனா வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்த அனைவரும் கட்டாயமாக முக கவசங்களை அணிய வேண்டும். இல்லை என்றால் ரூ.100 அபராதம் விதிக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி கமிஷனர் பிரகாஷ் அறிவித்து இருந்தார்.

இதையடுத்து சென்னை தெற்கு மண்டல துணை கமிஷனர் ஆல்பி ஜான் உத்தரவின்பேரில் ஆலந்தூர் மண்டல அலுவலர் முருகன் மேற்பார்வையில் நங்கநல்லூர் மார்க்கெட் பகுதியில் மண்டல செயற்பொறியாளர் ஹர்டின் ரோசாரியா தலைமையில் மாநகராட்சி அதிகாரிகள் கொரோனா ஆட்டோ மூலமாக மக்களிடத்தில் முக கவசம் அணிவது குறித்து விழிப்புணர்வு பிரசாரம் செய்தனர். அப்போது முக கவசம் அணியாமல் நடந்து சென்றவர்கள், வாகனங்களில் சென்றவர்களிடம் ரூ.100 அபராதம் விதித்து 4 துணி முக கவசத்தை வழங்கினார்கள். அப்போது கைக்குட்டையால் முகத்தை மூடி சென்றவர்களிடம் முக கவசத்தை அணிய வேண்டும் என்று வலியுறுத்தினார்கள்.

Similar News