செய்திகள்
வேலூர் கலெக்டர் ஆபீசில் 3 குழந்தைகளுடன் பெண் தீக்குளிக்க முயற்சி
கணவர் புடவை கட்டி கொண்டு சாமியார் போல் சுற்றுவதால் விரக்தி அடைந்த பெண் 3 குழந்தைகளுடன் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
வேலூர்:
வேலூர் அடுத்த மேல்மொணவூரை சேர்ந்தவர் குமரன். இவரது மனைவி ஜெயந்தி (வயது35). இந்த தம்பதிக்கு சுவேதா (7), நிஷா (5) என்ற 2 மகள்களும், ஜீவத் (6) மகனும் உள்ளனர்.
ஜெயந்தி இன்று வேலூர் கலெக்டர் அலுவலகத்திற்கு 3 குழந்தைகளுடன் வந்தார். கலெக்டர் அலுவலக வாசலில் அவர் கேனில் கொண்டு வந்திருந்த மண்எண்ணையை எடுத்து குழந்தைகள் மற்றும் அவரது உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.
இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த பெண் போலீசார் தடுத்து நிறுத்தி தண்ணீர் ஊற்றி அவர்களை மீட்டனர்.
பின்னர் ஜெயந்தி கூறியதாவது:-
என்னுடைய கணவர் குமரன் மேஸ்திரி வேலை செய்து வந்தார். கடந்த 3 ஆண்டுக்கு முன்பு அவரது தலை முடியில் ஜடை ஏற்பட்டது.
இதனையடுத்து புடவை கட்டிக்கொண்டு சாமியார்போல் குறி சொல்லி வருகிறார். அவர் புடவை கட்டி சுற்றி திரிவதால் எனக்கும் எனது குழந்தைகளுக்கும் அவமானமாக உள்ளது.
அவர் புடவை கட்டி சுற்றுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கண்ணீர் விட்டு கதறியபடி தெரிவித்தார்.
போலீசார் ஜெயந்திக்கு தண்ணீர் கொடுத்தனர். குழந்தைகளுக்கு டிபன் வாங்கி கொடுத்தனர். தாயுடன் தீக்குளிக்க வந்தது கூட தெரியாமல் பசியில் இருந்த குழந்தைகள் போலீசார் கொடுத்த உணவை வாங்கி சாப்பிட்டனர். போலீசார் ஜெயந்தியை எச்சரிக்கை செய்தும் அறிவுரை கூறியும் அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவத்தால் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.