செய்திகள்
சான்றிதழ் சரிபார்ப்பு

வேலூரில் போலீஸ் பணிக்கு தேர்ச்சி பெற்றவர்கள் சான்றிதழ் சரிபார்ப்பு

Published On 2020-02-11 09:30 GMT   |   Update On 2020-02-11 09:30 GMT
வேலூரில் போலீஸ் பணிக்கு தேர்ச்சி பெற்றவர்கள் சான்றிதழ்கள் போலீஸ் சூப்பிரண்டு பிரவேஷ்குமார் மேற்பார்வையில் சரிபார்க்கப்பட்டன. மேலும் அவர்களது கைரேகைகள் ஆய்வு செய்து பதிவு செய்யப்பட்டது.
வேலூர்:

வேலூர் ஒருங்கிணைந்த மாவட்டத்தில் போலீஸ் பணிக்கு நடந்த உடற்தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு இன்று சான்றிதழ் சரிபார்க்கும் பணி நடந்தது.

வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை உள்ளடக்கிய ஒருங்கிணைந்த மாவட்டம் மற்றும் திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்தவர்களுக்கும் போலீஸ் பணிக்கான உடற்தகுதி தேர்வு வேலூர் நேதாஜி மைதானத்தில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு நடந்தது.

இதில் ஆண்கள் மற்றும் பெண்கள் ஆகியோருக்கு தனித்தனியாக 400 மீட்டர் ஓட்டம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல் போன்றவை அளவீடு செய்யப்பட்டது.

இதில் வேலூர் ஒருங்கிணைந்த மாவட்டங்களை சேர்ந்த ஆண்கள் 577 பேரும், பெண்கள் 190 பேரும் தேர்ச்சி பெற்றனர். இவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்புக்கான கடிதம் அனுப்பப்பட்டது.

சான்றிதழ் சரிபார்ப்பு வேலூர் கோட்டை சுற்றுச்சாலையில் உள்ள காவலர் மண்டபத்தில் இன்று சான்றிதழ் சரிபார்க்கும் பணி நடந்தது.

வேலூர் போலீஸ் சூப்பிரண்டு பிரவேஷ்குமார் மேற்பார்வையில் சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டன. மேலும் அவர்களது கைரேகைகள் ஆய்வு செய்து பதிவு செய்யப்பட்டது.

இன்று ஒரே நாளில் சான்றிதழ் சரிபார்க்கும் பணி முடிவடையாவிட்டால் நாளையும் தொடரும் என போலீசார் தெரிவித்தனர்.
Tags:    

Similar News