செய்திகள்
எகிப்து வெங்காயம்

வேலூரில் கிலோ ரூ.100க்கு விற்பனை - எகிப்து வெங்காயம் ருசி இல்லை

Published On 2019-12-23 06:05 GMT   |   Update On 2019-12-23 06:05 GMT
வேலூர் மார்க்கெட்டுக்கு வந்துள்ள எகிப்து வெங்காயத்தில் ருசி இல்லாததால் விற்பனை குறைந்துள்ளது.
வேலூர்:

வெங்காய விலையை குறைக்கவும், தட்டுப்பாட்டை போக்கவும் எகிப்து நாட்டில் இருந்து வெங்காயத்தை கப்பல் மூலம் மத்திய அரசு இறக்குமதி செய்தது.

இந்த நிலையில் வேலூர் நேதாஜி மார்க்கெட்டிற்கு எகிப்து வெங்காயம் விற்பனைக்கு வந்துள்ளது.

பெரிய அளவிலான எகிப்து வெங்காயம் அதிகபட்சமாக 750 கிராம் எடையிலும், சிறிய அளவிலான வெங்காயம் 250 கிராம் எடையிலும் காணப்படுகிறது.

ஒரு கிலோ ரூ.100 என்ற விலையில் 50 கிலோ கொண்ட மூட்டை ரூ.5 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்படுகிறது.

நாட்டு வெங்காயம் ஒரு கிலோ ரூ.40 முதல் ரூ.100 வரை விற்பனை செய்யப்படுகிறது.

எகிப்து வெங்காயம் பெரிய அளவில் காணப்படுவதால் பெண்கள் அதனை வாங்க ஆர்வம் காட்டவில்லை.

மேலும் இந்த வெங்காயத்தை சமையலுக்கு பயன்படுத்தினால் சுவை குறைந்து காணப்படுகிறது. ருசி இல்லாததால் வீடுகளுக்கு எகிப்து வெங்காயத்தை வாங்குபவர்கள் எண்ணிக்கை குறைந்துள்ளது. ஓட்டல்களுக்கு அதிகளவில் வாங்கி செல்கின்றனர்.

அதனால் ஒரு கிலோ என்று சில்லரை விலையில் விற்பனை செய்யப்படவில்லை. 5 கிலோ மற்றும் அதற்கு மேல் வாங்கினால் மட்டுமே சில்லரையில் வழங்கப்படுகிறது.


Tags:    

Similar News