செய்திகள்
வெங்காய மூட்டைகள் சிதறி கிடக்கிறது.

கர்நாடகாவிலிருந்து தமிழகத்துக்கு பெரிய வெங்காயம் ஏற்றி வந்த லாரி விபத்தில் சிக்கியது

Published On 2019-11-12 05:14 GMT   |   Update On 2019-11-12 05:14 GMT
சத்தியமங்கலம் அருகே கர்நாடகாவிலிருந்து தமிழகத்துக்கு பெரிய வெங்காயம் ஏற்றி வந்த லாரி விபத்தில் சிக்கியதால் பலமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தாளவாடி:

பெரிய வெங்காயம் விலையேற்றத்தையொட்டியும் பெரிய வெங்காயத்தின் தட்டுப்பாட்டை போக்கவும் பக்கத்து மாநிலங்களிலிருந்து லாரிகள் மூலம் கொண்டு வரப்பட்டு வருகிறது.

அதன்படி நேற்று இரவு கர்நாடக மாநிலத்திலிருந்து தமிழகத்துக்கு ஒரு லாரியில் பெரிய வெங்காயம் கொண்டு வரப்பட்டது.

இந்த லாரி இன்று (செவ்வாய்கிழமை) காலை 6.45 மணிக்கு சத்தியமங்கலம் வனப்பகுதி திம்பம் மலை பாதை 26-வது கொண்டை ஊசி வளைவில் வந்தகொண்டிருந்தது.

அப்போது வளைவில் திரும்பிய போது ரோட்டோரம் உள்ள ஒரு பாறையில் லாரி மோதி பழுதாகி ரோட்டை அடைத்தப்படி நின்றது.

இந்த விபத்தில் லாரியில் இருந்த பெரிய வெங்காய மூட்டைகள் சிதறி ரோட்டில் விழுந்தது. மேலும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இருபுறமும் வாகனங்கள் 4 கிலோ மீட்டர் தூரத்துக்கு அணிவகுத்து நின்றன. இதனால் பஸ் மற்றும் வேன்களில் சென்ற பயணிகள் மலைப்பாதையில் பல மணி நேரம் தவித்தனர்.

சம்பவ இடத்துக்கு ஆசனூர் போலீசாரும் தீயணைப்பு வீரர்களும் விரைந்தனர். மீட்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

திம்பம் மலை பாதையில் இப்படி தினம் தோறும் நடந்து வரும் லாரி விபத்துகளால் வாகன ஓட்டிகள் பெரும் அவதிப்பட்டு வருகின்றனர்.
Tags:    

Similar News