செய்திகள்
கனமழையால் தரைப்பாலத்தை மூழ்க வைத்து பெருக்கெடுத்து ஓடிய மழைவெள்ளம்.

சத்தியமங்கலம்- கோபி பகுதியில் கன மழை- தரைப்பாலங்கள் மூழ்கியது

Published On 2019-11-11 05:49 GMT   |   Update On 2019-11-11 05:49 GMT
சத்தியமங்கலம்- கோபி பகுதியில் கனமழையால் தரைப்பாலத்தை மூழ்கடித்து வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

சத்தியமங்கலம்:

ஈரோடு மாவட்டத்தில் இன்று அதிகாலை முதல் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது.

சத்தியமங்கலம், கோபி மற்றும் அந்தியூர் அதன் சுற்று வட்டார பகுதிகளில் இன்று காலை கன மழை கொட்டியது. தொடர்ந்து 1 மணி நேரமாக கொட்டி தீர்த்த மழையால் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

கோபி அருகே உள்ள கள்ளிப்பட்டி கணக்கம்பாளையம் கொண்டையம் பாளையம் அத்தாணி டி.என். பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அதிகாலை 4 மணி முதல் தொடர் கன மழையால் பொது மக்களின் இயல்பு வாழ்கை பாதிக்கப்பட்டது. பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் பள்ளி கல்லூரிகளுக்கு செல்லமுடியாமல் தவித்தனர்.

தொடர்ந்து 5 மணி நேரத்திற்கும் மேலாக பெய்துவரும் கன மழையினால் வேதாறை ஓடையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் கொண்டையன்பாளையம் தரைப்பாலம் மூழ்கியது.

சத்தியமங்கலம் அந்தியூர் தேசியநெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கணக்கம்பாளையம் பகுதிகளிலும் 2-க்கும் மேற்பட்ட தரைப்பாலங்கள் மூழ்கின. கணக்கப்பாளையம் கிராமத்தினுள் வெள்ள நீர் புகும் அபாயத்தில் மக்கள் பரிதவித்து வருகிறார்கள்.

Tags:    

Similar News