செய்திகள்
கலெக்டர் அன்புச்செல்வன்

திறந்த நிலையில் ஆழ்துளை கிணறுகள் இருந்தால் சீல் வைக்க வேண்டும்- கலெக்டர் அன்புச்செல்வன் உத்தரவு

Published On 2019-10-26 12:26 IST   |   Update On 2019-10-26 12:26:00 IST
கடலூர் மாவட்டத்தில் திறந்த நிலையில் ஆழ்துளை கிணறுகள் இருந்தால் சீல் வைக்க வேண்டும் என்று கலெக்டர் அன்புச்செல்வன் உத்தரவிட்டுள்ளார்.
கடலூர்:

கடலூர் ஈச்சங்காடு பகுதியில் உள்ள பரவனாறு கரையோரம் பனை விதைகள் நடும் விழா நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் அன்புச்செல்வன் தலைமை தாங்கி பனை விதைகளை நட்டு தொடங்கி வைத்தார்,

அதன் பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

திருச்சி மாவட்டத்தில் ஆழ்துளை கிணறு ஒன்றில் சுஜித் என்கின்ற சிறுவன் தவறுதலாக விழுந்துவிட்டான். தற்போது தமிழக அரசு சிறுவனை மீட்பதற்கு அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொண்டு வருகின்றனர்.

கடலூர் மாவட்டத்தில் திறந்தவெளிக் கிணறுகள், ஆழ்துளைக் கிணறுகள் போன்றவை இருப்பதை ஊராட்சி உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் நேரில் சென்று ஆய்வு செய்ய உத்தரவிட்டு உள்ளேன்.

மேலும் ஆழ்துளை கிணறுகள், திறந்தநிலை கிணறுகள் இருந்தால் உடனடியாக சீல் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதன் காரணமாக கடலூர் மாவட்டத்தில் பொதுமக்கள் உள்ளிட்ட அனைவரும் பாதிக்காத வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

விழாவில் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Similar News