செய்திகள்
பவானிசாகர் அணை (கோப்புப்படம்)

பவானிசாகர் அணையிலிருந்து தொடர்ந்து உபரிநீர் வெளியேற்றம்

Published On 2019-10-23 04:05 GMT   |   Update On 2019-10-23 04:05 GMT
பவானிசாகர் அணையிலிருந்து இன்று 2-வது நாளாக பவானி ஆற்றுக்கு வினாடிக்கு 7,100 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. கீழ்பவானி பாசன வாய்க்காலுக்கு 1,400 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.
ஈரோடு:

நீலகிரி மலையில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் பவானிசாகர் அணை இந்த ஆண்டு 2-வது தடவையாக நிரம்பியது.

அணை நிரம்பியதையொட்டி நேற்று அதிகாலை முதல் அணையின் பாதுகாப்பு கருதி தண்ணீர் பவானி ஆற்றுக்கு திறந்து விடப்பட்டது.

அணைக்கு நேற்றை விட நீர்வரத்து குறைந்தாலும் இன்று காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 10 ஆயிரத்து 158 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. தொடர்ந்து அணையின் நீர்மட்டம் 102 அடியில் நீடிக்கிறது. இதையொட்டி இன்று 2-வது நாளாக அணையில் இருந்து பவானி ஆற்றுக்கு வினாடிக்கு 7100 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. கீழ்பவானி பாசன வாய்க்காலுக்கு 1,400 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.

ஈரோடு மாவட்டததில் நேற்றும் பரவலாக மழை பெய்தது. கோபியில் 10 மி.மீ., கவுந்தப்பாடியில் 8 மி.மீ., வரட்டுப்பள்ளம் அணை பகுதியில் 5.4 மி.மீ., கொடிவேரியில் 5.2 மி.மீ. மழையும் பெய்தது.

ஈரோடு மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் வறண்டு கிடந்த பகுதி எல்லாம் பசுமையாக மாறி உள்ளது. மேலும் நிலத்தடி நீர் மட்டமும் கணிசமாக உயர்ந்து உள்ளது.
Tags:    

Similar News