செய்திகள்
பொன்.சிவபெருமான்

சாலை பாதுகாப்பை வலியுறுத்தி போலீஸ் ஏட்டு பாடிய பாடல் - வலைத்தளங்களில் வைரல்

Published On 2019-09-05 09:08 IST   |   Update On 2019-09-05 09:08:00 IST
கடலூர் மாவட்டத்தை சேர்ந்த போலீஸ் ஏட்டு ஒருவர் சாலை பாதுகாப்பை வலியுறுத்தி பாடிய விழிப்புணர்வு பாடல் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
கடலூர்:

கடலூர் மாவட்டத்தில் சாலை விபத்துகளை தடுக்கும் பொருட்டு காவல்துறையினர் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள். அந்த வகையில் கடலூர் மாவட்டத்தை சேர்ந்த போலீஸ் ஏட்டு ஒருவர் சாலை பாதுகாப்பை வலியுறுத்தி பாடிய விழிப்புணர்வு பாடல் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

சிதம்பரம் அருகே உள்ள மருதூர் காவல் நிலையத்தில் ஏட்டாக பணியாற்றுபவர் பொன் சிவபெருமாள். இவர் சாலை விதிகளை மதிப்பதன் அவசியம் பற்றிய விழிப்புணர்வு பாடலை பாடி உள்ளார்.

சாலை விதிகளை மதித்து தான் ஓட்டு, சாவே இல்லாமல் வாழ்ந்து தான் காட்டு, செல்போனில் பேசிக்கிட்டே வாகனத்தை நீ ஓட்டாதே...ஓடும் பேருந்தில் ஓடிப்போய் ஏறாதே, நேரம் சரியில்லைனா 108-ல் போவ டா, ஓசியில் வண்டியை வாங்கி ஓவர் ஸ்பீடா ஓட்டாதீங்க... என்ற விழிப்புணர்வு வரிகள் அடங்கிய அவரது பாடல் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருவதோடு வாகன ஓட்டிகளின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது.

Similar News