செய்திகள்
கொள்ளை

கோபியில் தொழில் அதிபரிடம் ரூ.10 லட்சம் கொள்ளை

Published On 2019-08-31 07:48 GMT   |   Update On 2019-08-31 07:48 GMT
ஈரோடு மாவட்டம் கோபியில் இன்று மதியம் தொழில் அதிபரிடம் இருந்து ரூ.10 லட்சம் பணத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர்.
கோபி:

ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள பங்களா புதூரை சேர்ந்தவர் சிவகுமார். தொழில் அதிபர். இவர் இன்று மதியம் கோபி வந்தார். அங்குள்ள எம்.ஜி.ஆர். சிலை அருகே உள்ள ஒரு வங்கியில் 10 லட்சம் ரூபாயை எடுத்து ஒரு பையில் வைத்துக் கொண்டு வெளியே வந்தார்.

ரோட்டு பக்கம் வந்த போது அங்கு வேகமாக ஒரு மோட்டார் சைக்கிள் வந்தது. அதில் 2 பேர் இருந்தனர்.

இதில் பின்னால் இருந்த ஆசாமி தொழில் அதிபரிடம் ரூ.10 லட்சம் இருந்த பணப்பையை பறித்தான். பிறகு மர்ம ஆசாமிகள் 2 பேரும் மோட்டார் சைக்கிளில் மின்னல் வேகத்தில் தப்பி சென்று விட்டனர்.

இதை கண்டு அதிர்ச்சி அடைந்த தொழில் அதிபர் கூக்குரலிட்டார். பிடியுங்கள்... பிடியுங்கள் என சத்தம் போட்டார். ஆனால் கொள்ளையர்கள் கண் இமைக்கும் நேரத்தில் மாயமாகிவிட்டனர்.

பட்டப்பகலில் நடந்த இந்த கொள்ளை சம்பவத்தால் கோபியில் கடும் பரபரப்பு நிலவியது. இது குறித்து தொழிலதிபர் சிவக்குமார் கோபி போலீசில் புகார் செய்தார்.

போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகிறார்கள். மேலும் அப்பகுதியில் உள்ள கடைகளில் இருக்கும் கண்காணிப்பு கேமிராவில் கொள்ளையர்கள் உருவம் பதிவாகி உள்ளதா? எனவும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News