செய்திகள்
மேட்டூர் அணை (கோப்புப்படம்)

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து மேலும் சரிவு

Published On 2019-07-15 04:25 GMT   |   Update On 2019-07-15 04:25 GMT
மேட்டூர் அணைக்கு நேற்று 232 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று மேலும் சரிந்து 206 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது.
சேலம்:

மேட்டூர் அணைக்கு நேற்று 232 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று மேலும் சரிந்து 206 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது.

அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக காவிரி ஆற்றில் 1000 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணையின் நீர்மட்டம் வேகமாக சரிந்து வருகிறது.

நேற்று 41.46 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று மேலும் சரிந்து 41.15 அடியானது.
Tags:    

Similar News