செய்திகள்

டிஜிபி அலுவலகத்தில் கருணாஸ் மீது பெண் புகார்

Published On 2019-02-25 07:54 GMT   |   Update On 2019-02-25 07:54 GMT
பொது சொத்துக்களை சேதப்படுத்தியதாக டி.ஜி.பி. அலுவலகத்தில் கருணாஸ் மீது பெண் புகார் அளித்துள்ளார். #Karunas
சென்னை:

சென்னை அண்ணாநகரை சேர்ந்தவர் நர்மதா. இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு அமைச்சர் ஜெயக்குமார் வீட்டில் நண்டு விடும் போராட்டம் நடத்தி பரபரப்பை ஏற்படுத்தியவர்.

இவர் இன்று காலை போலீஸ் டி.ஜி.பி. அலுவலகத்தில் புகார் மனு அளித்தார். அதில் கூறி இருப்பதாவது:-

கடந்த 20-ந்தேதி நான் மதுரை சென்று அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டிக்கு எதிராக தீர்ப்பளித்த நீதிபதிக்கு பேனர் வைத்து பாலாபிஷேகம் செய்தேன்.

மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய சென்றபோது ஆங்காங்கே பஸ்கள் நிறுத்தப்பட்டு இருந்தன. வைகை எக்ஸ்பிரஸ் ரெயிலும் மறிக்கப்பட்டு இருந்தது

கடைகள் மீது கல் எரிந்து பொதுச் சொத்துக்கள் சேதப்படுத்தப்பட்டன. இதுபற்றி விசாரித்தபோது முக்குலத்தோர் புலிப்படைத் தலைவர் கருணாஸ் எம்.எல்.ஏ. தேவர் சிலைக்கு மாலை அணிவிக்க வந்த போதுதான் இந்த சம்பவம் நடந்துள்ளது தெரியவந்தது.

அவர் ஏற்கனவே சென்னையில் வன்முறையை தூண்டும் வகையில் பேசியதற்காக கைதாகி சிறை சென்றவர். எனவே மதுரை சம்பவத்துக்கு காரணமான கருணாஸ் மீதும், அதில் தொடர்புடையவர்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கருணாசின் எம்.எல்.ஏ. பதவியை தகுதி நீக்கம் செய்ய வேண்டும். எதிர்காலத்தில் அவர் தேர்தலில் போட்டியிடக்கூடாது.

இவ்வாறு அதில் கூறி உள்ளார். #Karunas
Tags:    

Similar News