செய்திகள்
(கொலை செய்யப்பட்ட வாலிபர் கிருஷ்ணகுமார்) வாலிபர் கொலை செய்யப்பட்ட செம்மண் குவாரியை போலீசார் பார்வையிட்ட காட்சி

நெல்லிக்குப்பம் அருகே முன்விரோத தகராறில் வாலிபர் படுகொலை

Published On 2019-02-01 16:06 IST   |   Update On 2019-02-01 16:06:00 IST
கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் அருகே முன்விரோத தகராறு காரணமாக வாலிபர் படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெல்லிக்குப்பம்:

கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் அருகே உள்ள நடுவீரப்பட்டு அடுத்த சிலம்பிநாதன்பேட்டையைச் சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன். இவரது மனைவி காந்திமதி. இவர்களது மகன் கிருஷ்ணகுமார் (வயது 23).

இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த லட்சியபாரதி, அருள்மணிமுத்து ஆகியவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று கிருஷ்ணகுமார், லட்சியபாரதி, அருள்மணிமுத்து ஆகியோர் புத்திரன்குப்பத்தில் உள்ள செம்மண்குவாரியில் பேசிக்கொண்டிருந்தனர். அப்போது அவர்களுக்குள் திடீரென்று மோதல் ஏற்பட்டது. இதில் கிருஷ்ணகுமார் செம்மண்குவாரியில் விழுந்து பலத்த காயமடைந்தார்.

அவர் கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று இரவு கிருஷ்ணகுமார் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து கிருஷ்ணகுமாரின் தாயார் காந்திமதி நடுவீரப்பட்டு போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் லட்சியபாரதியை போலீசார் கைது செய்தனர். அருள்மணிமுத்துவை தேடி வருகின்றனர்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Similar News