செய்திகள்

32 குளங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரி ஐகோர்ட்டில் வழக்கு- திருவாரூர் கலெக்டருக்கு உத்தரவு

Published On 2018-11-13 07:58 GMT   |   Update On 2018-11-13 07:58 GMT
திருத்துறைப்பூண்டி நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள 32 குளங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்றகோரி தொரடப்பட்ட வழக்கில் திருவாரூர் கலெக்டர் பதில்அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. #MadrasHC #ThiruvarurCollector
திருவாரூர்:

திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டியை சேர்ந்தவர் அய்யப்பன்.

சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

திருத்துறைப்பூண்டி நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள 32 குளங்களை பலர் ஆக்கிரமித்துள்ளனர். இதில், 5 குளங்களை தனியார் ஆஸ்பத்திரிகள் ஆக்கிரமித்துள்ளன.

வருவாய் துறை ஓய்வு பெற்ற ஊழியர் மூலம் போலி ரசீதுகளை தயார் செய்து ஆக்கிரமிப்பாளர்கள், மின்சாரம், குடிநீர் இணைப்பு உள்ளிட்டவைகளை பெற்றுள்ளனர்.

இதனால், சிறு அளவிலான மழை பெய்தால் கூட, குடியிருப்புகளுக்குள் தண்ணீர் புகுந்து விடுகிறது.

எனவே, இந்த குளங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று திருவாரூர் மாவட்ட கலெக்டர், வருவாய் கோட்டாட்சியர், நகராட்சி ஆணையர் உள்ளிட்டோருக்கு உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் வேணு கோபால், பொங்கியப்பன் ஆகியோர், திருவாரூர் மாவட்ட கலெக்டர், வருவாய் கோட்டாட்சியர், நகராட்சி ஆணையர் உள்ளிட்டோர் விரிவான பதில் மனுவை தாக்கல் செய்ய உத்தரவிட்டனர். #MadrasHC #ThiruvarurCollector
Tags:    

Similar News