செய்திகள்

நீர் பிடிப்பு பகுதியில் மழை- மீண்டும் 101 அடியை தொட்ட பவானிசாகர் அணை

Published On 2018-11-03 09:50 GMT   |   Update On 2018-11-03 09:50 GMT
பவானிசாகர் அணைக்கு வினாடிக்கு 2300 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் அணையின் நீர்மட்டம் மீண்டும் 101 அடியை தொட்டது. #BhavanisagarDam
ஈரோடு:

பவானிசாகர் அணைக்கு கடந்த சில நாட்களாக மிதமாகவே தண்ணீர் வந்து கொண்டிருந்தது. இந்த நிலையில் நேற்று நீர் பிடிப்பு பகுதியில் நல்ல மழை பெய்தது.

இதையொட்டி இன்று காலை முதல் பவானிசாகர் அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளது. நேற்று1230 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. இன்று காலை 8 மணி நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு 2300 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

அணையின் நீர்மட்டம் மீண்டும் 101 அடியை தொட்டது. அணையின் நீர் கொள்ளளவு 105 அடியாகும்.

அணையில் இருந்து கீழ் பவானி வாய்க்காலுக்கு வினாடிக்கு 2500 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.

பவானிசாகர் அணைக்கு தொடர்ந்து நீர் வரத்து அதிகரிப்பால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சியுடன் உள்ளனர். விவசாய பணிகளும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. #BhavanisagarDam
Tags:    

Similar News