செய்திகள்

திருட்டு வழக்கில் கைதானவர் தப்பி ஓட்டம்: 3 போலீஸ்காரர்கள் ஆயுதப்படைக்கு மாற்றம் - போலீஸ் சூப்பிரண்டு நடவடிக்கை

Published On 2018-10-19 05:02 GMT   |   Update On 2018-10-19 05:02 GMT
திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்ட வாலிபர் போலீஸ் நிலையத்தில் இருந்து தப்பினார். இதையடுத்து 3 போலீஸ்காரர்கள் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டனர்.

விருதுநகர்:

விருதுநகரில் அருப்புக் கோட்டை ரோட்டில் உள்ள இரும்புக்கடையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள பொருட்கள் திருட்டு போனது. இது தொடர்பாக விருதுநகர் மேற்கு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

அதே பகுதியைச் சேர்ந்த கருப்பையா என்பவர் திருடியிருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.

அவருடன் பெரிய வள்ளிகுளம் அருகே உள்ள புதுப்பட்டியைச் சேர்ந்த பன்னீர்செல்வம் (38) என்பவரும் திருட்டில் ஈடுபட்டிருந்தார்.

அவரை போலீசார் தேடி வந்த நிலையில் நேற்று முன்தினம் பன்னீர்செல்வம் கைது செய்யப்பட்டார். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்துவதற்காக போலீஸ் நிலைய அறையில் வைத்திருந்தனர்.

இந்த நிலையில் போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரர்கள் அஜாக்கிரையாத இருந்த சூழ்நிலையை பயன்படுத்திக்கொண்டு கைதி பன்னீர்செல்வம் அங்கிருந்து தப்பினார். இது உயர் அதிகாரிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மாவட்ட போலீஸ் சூப் பிரண்டு ராஜ ராஜன் உத்தர வின் பேரில் விசாரணை நடத்தப்பட்டது.

விருதுநகர் மேற்கு போலீஸ் நிலையத் தில் பணிபுரியும் போலீஸ் காரர்கள் மணிவண்ணன், ரவிசங்கர், ஜெயமணி ஆகியோர் பணியில் கவனக் குறைவாக இருந்தது தெரிய வந்தது.

இதையடுத்து 3 பேரையும் ஆயுதப்படைக்கு மாற்றம் செய்து போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டார். தப்பியோடிய கைதி பன்னீர் செல்வத்தை போலீசார் தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News