செய்திகள்

இன்று 87வது பிறந்தநாள் - அப்துல்கலாம் நினைவிடத்தில் மாணவ, மாணவிகள் மரியாதை

Published On 2018-10-15 11:29 IST   |   Update On 2018-10-15 11:29:00 IST
அப்துல்கலாமின் 87-வது பிறந்த நாளையொட்டி அவரது நினைவிடத்தில் மாணவ-மாணவிகள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர். #AbdulKalam
ராமேசுவரம்:

முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமின் 87-வது பிறந்த நாள் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது.

இதையொட்டி ராமேசுவரம் பேக்கரும்பில் உள்ள அவரது மணிமண்டபம் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. அப்துல்கலாமின் அடக்க ஸ்தலம் மலர் போர்வைகளால் போர்த்தப்பட்டு இருந்தது.



காலை 9 மணிக்கு கலாமின் சகோதரர் முத்துமீரான் மரைக்காயர் மற்றும் குடும்பத்தினர், நடிகர் தாமு ஆகியோர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். பின்னர் தூஆ ஓதி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.

இதனை தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் சார்பில் கலெக்டர் வீரராகவராவ் மற்றும் அதிகாரிகள் மரியாதை செலுத்தினர்.

ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த கல்லூரி, பள்ளி மாணவ-மாணவிகள் ஆர்வத்துடன் வந்து மரியாதை செலுத்தி மணி மண்டபத்தில் வைக்கப்பட்டுள்ள கலாமின் அரிய புகைப்படங்களை கண்டு களித்தனர்.

ராமநாதபுரம் வந்திருந்த சுற்றுலா பயணிகளும் கலாமின் நினைவிடத்துக்கு வந்து மரியாதை செலுத்தினர்.

அப்துல்கலாம் படித்த ராமநாதபுரம் சுவார்ட்ஸ் மேல்நிலைப்பள்ளியில் இன்று மாணவ-மாணவிகள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

முன்னதாக அப்துல் கலாம் பிறந்த நாளை முன்னிட்டு பேக்கரும்பு மணிமண்டபத்தில் நேற்று பசுமை ராமேசுவரம் என்ற விழிப்புணர்வு மனித சங்கிலி நடந்தது. இதில் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், கலெக்டர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.  #AbdulKalam


Tags:    

Similar News