செய்திகள்

மதுரை மாவட்டத்தில் 1500 மருந்து கடைகள் அடைப்பு

Published On 2018-09-28 05:05 GMT   |   Update On 2018-09-28 05:05 GMT
ஆன்லைன் வர்த்தகத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மதுரை மாவட்டத்தில் 1500 மருந்து கடைகள் அடைக்கப்பட்டு உள்ளன. #MedicalsStrike
மதுரை:

ஆன்லைன் மூலம் மருந்து, மாத்திரைகளை விற்பனை செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் மருந்து கடை வணிகர்கள் சங்க அமைப்புகள் இன்று ஒரு நாள் கடையடைப்பு போராட்டம் நடத்த முடிவு செய்திருந்தன. அதன்படி இன்று மதுரை மாவட்டத்தில் 1500 மருந்து கடைகள் மூடப்பட்டன.

இது தொடர்பாக மதுரை மாவட்ட மருந்து கடை வணிகர் சங்க செயலாளர் மனோகரன் கூறும்போது, மதுரை மாவட்டத்தில் 1500 மருந்து கடைகள் உள்ளன. ஆன்லைன் வர்த்தகத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ஒரு நாள் கடையடைப்பு போராட்டத்தை நடத்தி வருகிறோம். மேலும் பழங்காநத்தத்தில் இன்று ஆர்ப்பாட்டமும் நடத்துகிறோம் என்றார்.

மதுரை மாவட்டத்தில் பெரும்பாலான மருந்து கடைகள் அடைக்கப்பட்டு இருந்ததால் பொதுமக்கள் மருந்து, மாத்திரைகள் வாங்க மிகவும் சிரமப்பட்டனர்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் 660 மருந்து கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. மருத்துவமனைகளுடன் இணைந்த கடைகள் திறக்கப்பட்டிருந்தன. #MedicalsStrike
Tags:    

Similar News