செய்திகள்

விழுப்புரம் மாவட்ட வரைவு வாக்காளர் பட்டியல்- கலெக்டர் சுப்பிரமணியன் வெளியிட்டார்

Published On 2018-09-01 15:34 IST   |   Update On 2018-09-01 15:34:00 IST
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டமன்ற தொகுதிக்கான வரைவு வாக்காளர் பட்டியலை கலெக்டர் சுப்பிரமணியன் வெளியிட்டார்.
விழுப்புரம்:

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டமன்ற தொகுதிக்கான வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிட்டு விழா இன்று விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. கலெக்டர் சுப்பிரமணியன் வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டார்.

இதில் மாவட்டத்தில் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 26 லட்சத்து 13 ஆயிரத்து 918 ஆகும். ஆண் வாக்காளர்கள் 13 லட்சத்து 12 ஆயிரத்து 2 பேரும், பெண் வாக்காளர்கள் 13 லட்சத்து 1548 பேரும், 3-ம் பாலின வாக்காளர்கள் 368 பேர் உள்ளனர். புதியதாக 18 ஆயிரத்து 763 வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.
Tags:    

Similar News