செய்திகள்
பாபு சாமுவேல்

திருமுல்லைவாயல் காப்பகத்தில் பாலியல் தொல்லை- டெலிவிஷன் பார்க்க அழைத்து சிறுமிகளிடம் சில்மிஷம்

Published On 2018-08-27 12:12 IST   |   Update On 2018-08-27 12:12:00 IST
திருமுல்லைவாயலில் உள்ள தனியார் குழந்தைகள் காப்பகத்தில் டெலிவிஷன் பார்க்க அழைத்து சிறுமிகளிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட பாபு சாமுவேலை போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னை:

திருமுல்லைவாயல் சரஸ்வதி நகர் 2-வது தெருவில் தனியார் குழந்தைகள் காப்பகம் இருந்தது. இங்கு தங்கியிருந்த சிறுமிகளுக்கு காப்பக ஊழியர்கள் பாலியல் தொல்லை கொடுப்பது தெரியவந்தது.

இது குறித்து ஆவடி அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து காப்பக உரிமையாளர்கள் ஜேக்கப், அவரது மனைவி விமலா ஜேக்கப், காப்பக மேலாளர் பாஸ்கர், உதவியாளர் முத்து ஆகிய 4 பேரை உடனடியாக கைது செய்தனர். காப்பகத்தில் இருந்த 48 சிறுவர்-சிறுமிகள் மீட்கப்பட்டனர்.

இந்த நிலையில் தலைமறைவாக இருந்த காப்பாளர் பாபு சாமுவேலை நேற்று போலீசார் கைது செய்தனர். கைதான பாபுசாமுவேலை குடும்ப தகராறில் அவரது மனைவி திருமணமான 2 ஆண்டுகளிலேயே பிரிந்து சென்றுவிட்டார்.

‘காப்பகத்தில் காப்பாளராக இருந்த பாபு சாமுவேல் தினமும் அங்கு தங்கி இருக்கும் சிறுவர்-சிறுமிகளை தனது அறைக்கு டி.வி. பார்க்க அழைப்பது வழக்கம்.

டி.வி. பார்க்கும் ஆசையில் வரும் சிறுமிகளை குறி வைத்து அவர் சில்மி‌ஷத்தில் ஈடுபட்டு இருக்கிறார். சிறுவர்களை ஏதாவது கூறி திட்டி வெளியே அனுப்பி விட்டு தனது லீலைகளை தொடர்ந்து உள்ளார்.

அவரது மிரட்டல்களுக்கு பயந்த சிறுமிகள் இதுபற்றி வெளியில் சொல்லாமல் இருந்து இருக்கிறார்கள். தற்போது பாபு சாமுவேல் போலீஸ் பிடியில் சிக்கி விட்டார்.

அவரை போலீசார் பூந்தமல்லி கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.
Tags:    

Similar News