செய்திகள்

மக்களின் நலனுக்காக போராடும் இயக்கம் திமுக- அனிதா ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ பேச்சு

Published On 2018-07-29 14:53 GMT   |   Update On 2018-07-29 14:53 GMT
சொத்து வரி உயர்வை கண்டித்து திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது பேசிய அனிதா ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ, மக்களின் நலனுக்காக போராடும் இயக்கம் திமுக என்றார். #dmkprotest
ஆறுமுகநேரி:

தமிழக அரசின் சொத்து மற்றும் வீட்டு வரி உயர்வை கண்டித்து நகர தி.மு.க. சார்பில் காயல்பட்டினத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தூத்துக்குடி தெற்கு மாவட்ட பொறுப்பாளர் அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். நகர செயலாளர் முத்துமுகமது, திருச்செந்தூர் ஒன்றிய செயலாளர் ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர், பாலப்பா, கணபதி, வழக்கறிஞர் ஜெபராஜ், மாவட்ட துணைச் செயலாளர் ஆறுமுகப்பெருமாள், மாநில பொதுக்குழு உறுப்பினர் சாகுல்ஹமீது, மருத்துவ அணி மாநில துணை அமைப்பாளர் டாக்டர் வெற்றிவேல் ஆகியோர் பேசினர்.

ஆர்ப்பாட்டத்தில் அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. பேசியதாவது:-

தி.மு.க. தலைவர் கருணாநிதி உயிருக்கு போராடிக்கொண்டு இருக்கும் நிலையிலும்கூட மக்களின் நலனுக்காக இன்றைக்கு வீதியில் இறங்கி போராடிக் கொண்டிருக்கிறது தி.மு.க. தமிழகத்தில் எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியிலும், மத்தியில் மோடி ஆட்சியிலும் மக்கள் படும் துன்பத்திற்கு அளவேயில்லாமல் போய்விட்டது. வீட்டு வரியை அ.தி.மு.க. அரசு பல மடங்கு உயர்த்தி உள்ளதால் பாதிக்கப்படுவது சாதாரண மக்கள் தான். இந்த வரி உயர்வை அரசு திரும்ப பெற வேண்டும். அ.தி.மு.க. ஆட்சியையும், மோடி ஆட்சியையும் துரத்தி அடிக்கும் கடமை மக்களுக்கு உள்ளது. ஸ்டாலினை தமிழக முதல்வர் ஆக்க அனைவரும் உறுதி எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

ஆர்ப்பாட்டத்தில் மாநில மாணவரணி துணை செயலாளர் உமரிசங்கர், தலைமை செயற்குழு உறுப்பினர் கருணாகரன், மாவட்ட அவைத்தலைவர் அருணாச்சலம், துணைச் செயலாளர் முகமது அப்துல் காதர், ஒன்றிய செயலாளர்கள் உடன்குடி பாலசிங், ஆழ்வை கிழக்கு நவீன்குமார், சாத்தான்குளம் ஜோசப், ஸ்ரீவைகுண்டம் மேற்கு கொம்பையா, கருங்குளம் வடக்கு மகாராஜன், ஓட்டபிடாரம் மேற்கு சண்முகையா,நகர செயலாளர்கள் ஆறுமுகநேரி கல்யாணசுந்தரம், திருச்செந்தூர் சுடலை, ஆத்தூர் முருகப்பெருமாள், சாத்தான்குளம் இளங்கோ, ஸ்ரீவைகுண்டம் பெருமாள், ஆழ்வார் திருநகரி முத்து ராமலிங்கம், உடன்குடி ஜான் பாஸ்கர், நாசரேத் ரவி செல்வகுமார் உள்பட திரளானோர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். #dmkprotest
Tags:    

Similar News