செய்திகள்

ஆத்தூரில் பள்ளி மாணவ-மாணவிகளுடன் டவுன் பஸ்சில் பயணம் செய்த எம்.எல்.ஏ

Published On 2018-07-24 06:48 GMT   |   Update On 2018-07-24 06:48 GMT
சேலம் மாவட்டம் ஆத்தூரில் பள்ளி மாணவ, மாணவிகளுடன் எம்.எல்.ஏ. சின்னதம்பி பயணம் செய்தார். இதனால் மாணவ, மாணவிகள் கைகளை தட்டி மகிழ்ச்சி அடைந்தனர். #ChinnathambiMLA
ஆத்தூர்:

சேலம் மாவட்டம் ஆத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கல்லாநத்தம் செட்டில்மண்ட் பகுதியில் அரசு பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளி மாணவ, மாணவிகள் பள்ளிக்கு செல்ல பஸ் வசதி இல்லை என கோரிக்கை வைத்தனர். இந்த கோரிக்கையை ஏற்று ஆத்தூர் தொகுதி எம்.எல்.ஏ. சின்னதம்பி புதிய பஸ்சை இயக்க நடவடிக்கை எடுத்தார். அதுமட்டுமல்லாமல் பஸ் இயக்கத்தை சின்னதம்பி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்து மாணவ, மாணவிகளுடன் பயணம் செய்தார்.

அவருடன் அ.தி.மு.க. ஒன்றிய துணை செயலாளர் கே.பி.பெரியசாமி, ஊராட்சி முன்னாள் துணை தலைவர் மருதமுத்து, கல்லாநத்தம் சங்கர், அரசு வக்கீல் மூவேந்தன் ஆகியோர் சென்றனர். சுமார் 5 கிலோ மீட்டர் தூரம் பஸ்சில் எம்.எல்.ஏ. பயணம் செய்தார். இதனால் மாணவ, மாணவிகள் கைகளை தட்டி மகிழ்ச்சி அடைந்தனர். #ChinnathambiMLA
Tags:    

Similar News