செய்திகள்

சென்னையில் சிறுமியை கற்பழித்தவர்களை தூக்கில் போடுங்கள்- ஈரோட்டில் மாற்று திறனாளிகள் போராட்டம்

Published On 2018-07-18 18:20 IST   |   Update On 2018-07-18 18:22:00 IST
சென்னையில் மாற்றுத்திறனாளி சிறுமியை கற்பழித்த 17 கயவர்களை எந்த விசாரணையும் இன்றி உடனடியாக தூக்கில் போட வேண்டும் என்று ஈரோட்டில் மாற்று திறனாளிகள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். #chennaigirlharassment
ஈரோடு:

ஈரோடு மாவட்ட பீனிக்ஷ் மாற்றுத் திறனாளிகள் நலச்சங்கம் சார்பில் இன்று ஈரோடு மாவட்டகலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாற்று திளனாளிகள் நல அலுவலகம் முன் திரண்டனர்.

நலச்சங்க தலைவர் ஜெயப்பிரகாஷ் தலைமையில் மாற்றுத்திறனாளிகள் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். செயலாளர் மணிகண்டன், பொருளாளர் அருணாச்சலம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

சென்னையில் 11 வயது நிரம்பிய மாற்றுத்திறனாளி சிறுமியை கற்பழித்த 17 கயவர்களை எந்த விசாரணையும் இன்றி உடனடியாக தூக்கில் போட வேண்டும் என்று கோரி இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் மாற்றுத்திறனாளி நல அலுவலகத்தில் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க வேண்டும், அனைத்து அரசு அலுவலகங்களிலும் சாய்தளம் மற்றும் வீல்சேர் அமைத்து கொடுக்க வேண்டும். மாற்று திறனாளி நல அலுவலக அதிகாரிகள் தன்னிச்சையாக செயல்படுகிறார்கள். ஆகவே அவர்களைமாற்ற வேண்டும். போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தியும் இந்த முற்றுகை போராட்டம் நடந்தது. #chennaigirlharassment
Tags:    

Similar News