செய்திகள்
சமயபுரம் கோவில் யானை மசினியை படத்தில் காணலாம்.

பாகனை கொன்ற சமயபுரம் கோவில் யானைக்கு ஒரத்தநாட்டில் சிகிச்சை

Published On 2018-07-14 07:28 GMT   |   Update On 2018-07-14 07:28 GMT
திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலில் பாகனை கொன்ற யானை மசினிக்கு ஒரத்தநாட்டில் உள்ள கால்நடை மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட உள்ளது.
திருச்சி:

திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலில், கடந்த மே மாதம் 25-ந்தேதி யானை மசினி, பாகன் கஜேந்திரனை மிதித்து கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து சமயபுரம் கோவிலிலிருந்து யானை மசினி வெளியே கொண்டு வரப்பட்டு, மாகாளிகுடியில் உள்ள உஜ்ஜயினி மாகாளியம்மன் கோவில் பகுதியில் பராமரிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் சில நாட்களாக யானை மசினி உணவு எதுவும் உட்கொள்ளாமல் மிகவும் சோர்வாக காணப்பட்டது. வயிற்றுப்போக்கும் ஏற்பட்டது. இதையடுத்து யானைக்கு சிகிச்சை அளிக்க தேனி மருத்துவக்குழுவினர் மற்றும் ஒரத்தநாடு கால்நடை மருத்துவ ஆராய்ச்சி நிலைய மருத்துவர் வீரச்செல்வன் தலைமையிலான மருத்துவக்குழுவினர், யானை மசினியை பரிசோதனை செய்தனர். அப்போது யானைக்கு வயிற்றில் கட்டி இருப்பது கண்டறியப்பட்டது.

இதையடுத்து யானையை ஒரத்தநாட்டில் உள்ள கால்நடை மருத்துவ ஆராய்ச்சி நிலையத்திற்கு கொண்டு செல்ல முடிவு செய்யப்பட்டது. இந்து சமய அறநிலையத்துறை உயர் அதிகாரிகளிடம் இருந்து அனுமதி கிடைத்ததை தொடர்ந்து யானை மசினி லாரி மூலம் ஒரத்தநாட்டில் உள்ள கால்நடை மருத்துவ ஆராய்ச்சி நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு வைத்து யானைக்கு சிகிச்சை அளிக்கப்பட உள்ளது. யானையுடன் கோவில் இணை ஆணையர் குமரதுரை, மேலாளர் ஹரிஹர சுப்ரமணியன் மற்றும் வன பாதுகாவலர்கள் சென்றனர்.
Tags:    

Similar News