செய்திகள்
பள்ளத்தில் கவிழ்ந்து கிடக்கும் வேன்.

ஆம்பூர் அருகே வேன் கவிழ்ந்து 14 பக்தர்கள் படுகாயம்

Published On 2018-07-14 05:52 GMT   |   Update On 2018-07-14 05:52 GMT
ஆம்பூர் அருகே தடுப்பு சுவர் மீது வேன் மோதி திருப்பதி பக்தர்கள் 14 பேர் படுகாயமடைந்தனர்.

ஆம்பூர்:

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தாலுகா ராடசமுத்திரம் பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார் (வயது 40). சொந்தமாக வேன் வாங்கி டிரைவராக டிராவல்ஸ் நடத்தி வருகிறார்.

இவர் மனைவி மற்றும் உறவினர்களோடு சேர்த்து 25 பேர் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு நேற்றிரவு வேனில் புறப்பட்டனர்.

சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் இன்று காலை வேன் வந்து கொண்டிருந்தது. ஆம்பூர் அடுத்த பச்சக்குப்பம் என்ற இடத்தில் வேன் சென்ற போது கட்டுப்பாட்டை இழந்து தடுப்புச் சுவர் மீது மோதி சாலை அருகே இருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது.

இதில் சிவக்குமார் (வயது 29), பிரவீன்(20), ராமகிருஷ்ணன் (40), பழனியம்மாள் (32), இந்திராணி (50), பிரகாஷ் (19), விஜயராஜ் (26), ராஜசேகர் (26), அம்மையப்பன் (44), தனம் (43), ராஜேஸ்வரி (47), மலர்விழி (21), அழகர்சாமி (60), கோமதி (40) ஆகியோர் படுகாயமடைந்தனர்.

இது குறித்து தகவலறிந்த ஆம்பூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இடுபாடுகளில் சிக்கி படுகாயமடைந்தவர்களை மீட்டு ஆம்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்தால் நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News