செய்திகள்

ரெயில்வே இணையதளத்தில் தமிழையும் சேர்க்க வேண்டும்- மத்திய மந்திரிக்கு, ரெயில் பயணிகள் சங்கத்தினர் கோரிக்கை

Published On 2018-07-05 04:20 GMT   |   Update On 2018-07-05 04:20 GMT
தமிழக மக்கள் எளிதாக டிக்கெட் முன்பதிவு செய்ய ரெயில்வே இணையதளத்தில் தமிழையும் சேர்க்க வேண்டும் என மத்திய மந்திரிக்கு, ரெயில் பயணிகள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாகர்கோவில்:

குமரி மாவட்ட ரெயில் பயணிகள் சங்க தலைவர் ஸ்ரீராம், செயலாளர் எட்வர்டு ஜெனி ஆகியோர் மத்திய ரெயில்வே மந்திரி, ரெயில்வே வாரிய தலைவர், தென்னக ரெயில்வே பொதுமேலாளர் ஆகியோருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-

ரெயில்வே புதிய இணையதள சேவையின் மூலமாக ரெயில் டிக்கெட் முன்பதிவு செய்வதற்கு இந்தி மற்றும் ஆங்கில மொழிகள் மட்டுமே பயன்பாட்டில் உள்ளன. வேறு பிராந்திய மொழிகள் எதுவும் அதில் இடம்பெறவில்லை. இதனால் இந்தி மொழி தெரியாத தமிழக மக்களும், பிற பிராந்திய மொழி மக்களும் அவதிப்படும் நிலை உள்ளது.

எனவே ரெயில்வே முன்பதிவு இணையதள சேவையில் தமிழையும் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன் மூலம் எளிதாக டிக்கெட் முன்பதிவு செய்ய முடியும் என்பதால், தமிழகத்தில் உள்ள 8 கோடி மக்கள் பயன் பெறுவார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #tamilnews
Tags:    

Similar News