செய்திகள்
மாநாடு நடக்கும் பகுதியை உதயநிதி ஸ்டாலின் பார்வையிட்ட காட்சி. அருகில் அவரது தாயார் துர்கா ஸ்டாலின் உள்ளார்.

தி.மு.க. மண்டல மாநாட்டு பணியை பார்வையிட்ட உதயநிதி ஸ்டாலின்

Published On 2018-03-23 10:25 GMT   |   Update On 2018-03-23 10:25 GMT
ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் இன்று மதியம் தி.மு.க. மண்டல மாநாட்டு பணியை உதயநிதி ஸ்டாலின் பார்வையிட்டார். உதயநிதி ஸ்டாலினுடன் அவரது தாயார் துர்கா ஸ்டாலினும் வந்திருந்தார்.
ஈரோடு:

பெருந்துறையில் நாளை தி.மு.க. மண்டல மாநாடு தொடங்கி 25-ந்தேதி வரை நடக்கிறது. விழாவையொட்டி பிரமாண்ட பந்தல் மற்றும் மேடை அமைக்கப்பட்டு பணிகள் நிறைவடைந்துள்ளது.

சென்னையில் இருந்து இன்று மதியம் பெருந்துறைக்கு வருகை தந்த நடிகரும், தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் மகனுமான உதயநிதி ஸ்டாலின் தி.மு.க. மண்டல மாநாடு நடக்கும் இடத்துக்கு சென்றார்.

அங்கு அமைக்கப்பட்டுள்ள மாநாட்டின் பிரமாண்ட பந்தல் மற்றும் மேடையை பார்வையிட்டார். அவரை மாநாட்டு வரவேற்பு குழு தலைவர் முத்துசாமி மற்றும் கட்சி பிரமுகர்கள் அவரை ஒவ்வொரு பகுதிக்கும் அழைத்து சென்று விளக்கினர். உதயநிதி ஸ்டாலினுடன் அவரது தாயார் துர்கா ஸ்டாலினும் வந்திருந்தார்.

மாநாட்டு அரங்கில் அமைக்கப்பட்டிருந்த தி.மு.க. வரலாற்று புகைப்பட கண்காட்சியை உதயநிதி ஸ்டாலின், துர்கா ஸ்டாலின் ரசித்து பார்த்தனர்.

மாநாட்டு ஏற்பாடுகள் மற்றும் பந்தல், மேடை மிகவும் அருமையாக சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளதாக உதயநிதி ஸ்டாலின் பாராட்டினார். #Tamilnews
Tags:    

Similar News