செய்திகள்

கடலூரில் 18-ந் தேதி தனியார் வேலைவாய்ப்பு முகாம்

Published On 2018-03-13 14:41 IST   |   Update On 2018-03-13 14:41:00 IST
கடலூர் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம் மூலமாக தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம், வருகிற 18-ந் தேதி கடலூர் மஞ்சக்குப்பம் செயின்ட் ஜோசப் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெறுகிறது.
கடலூர்:

கடலூர் கலெக்டர் தண்டபாணி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கடலூர் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம் மூலமாக தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம், வருகிற 18-ந் தேதி கடலூர் மஞ்சக்குப்பம் செயின்ட் ஜோசப் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற உள்ளது.

கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த எட்டாம் வகுப்பு, பத்தாம் வகுப்பு, பன்னி ரெண்டாம் வகுப்பு, கலை, அறிவியல், வணிகப் பட்டதாரிகள் மற்றும் ஐ.டி.ஐ., டிப்ளமோ மற்றும் பொறியியல் பட்டப்படிப்பு படித்துள்ள வேலை வாய்ப்பற்ற இளைஞர்கள் இதில் கலந்து கொண்டு பயன்பெறலாம்.

விருப்பமுள்ள இம்மாவட்டத்தை சார்ந்த படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள், முகாம் தொடர்பான கூடுதல் விவரங்களை அறிய விரும்பும் இளைஞர்கள், கடலூர் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தை நேரடியாகவோ அல்லது தொலைபேசி (04142290039) வாயிலாகவோ தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் கூறியுள்ளார். #tamilnews

Similar News