செய்திகள்

கவுந்தப்பாடி பெட்ரோல் பங்கில் சிக்கிய 2 ஆயிரம் ரூபாய் கள்ளநோட்டு

Published On 2018-03-05 12:55 IST   |   Update On 2018-03-05 12:56:00 IST
கவுந்தப்பாடி பெட்ரோல் பங்கில் சிக்கிய 2 ஆயிரம் ரூபாய் கள்ளநோட்டு புழக்கத்தில் விட்டது யார் என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கவுந்தப்பாடி:

கவுந்தப்பாடி- ஈரோடு ரோட்டில் பெட்ரோல் பங்க் ஒன்று உள்ளது. இந்த பெட்ரோல் பங்கில் நேற்று முன்தினம் பலர் பெட்ரோல், டீசல் நிரப்பி சென்றனர்.

அதன்மூலம் கிடைத்த பணத்தை அன்று இரவு ஊழியர்கள் பெட்ரோல் பங்க் உரிமையாளரிடம் கொடுத்தனர். உரிமையாளர் கணக்கை சரிபார்த்தார்.

பின்னர் அந்த பணத்தை அங்குள்ள வங்கியில் போட்டு வைக்க கொண்டு சென்றார். அந்த பணத்தை கள்ளநோட்டுகளை ஆய்வு செய்யும் எந்திரத்தில் வங்கி கேஷியர் செலுத்தினார்.

அப்போது பெட்ரோல் பங்க் உரிமையாளர் கொடுத்த பணத்தில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டு ஒன்று கள்ளநோட்டு என்பது தெரிய வந்தது.

இந்த தகவலை பெட்ரோல் பங்க் உரிமையாளரிடம் வங்கி கேஷியர் தெரிவித்தார். மேலும் அந்த 2 ஆயிரம் ரூபாய் நோட்டு செல்லாதது என்றும் கிழித்து எரிந்துவிடும்படியும் கூறி கள்ளநோட்டு மீது சீல் வைக்கப்பட்டது.

பெட்ரோல் பங்க்கில் 2 ஆயிரம் ரூபாய் கள்ளநோட்டை மாற்றியது யார்? என்பது தெரியவில்லை. இதுபற்றி பெட்ரோல், டீசல் நிரப்பிய ஊழியர்களிடம் உரிமையாளர் கேட்டார்.

ஆனால் அந்த ஊழியர்களுக்கு யார் அந்த 2 ஆயிரம் ரூபாய் நோட்டை கொடுத்தார்கள்? என்பது தெரியவில்லை. இதனால் அந்த ரூபாய் நோட்டை மாற்றியது யார்? என்பது தெரியாமல் உள்ளது. அதுபற்றிய விசாரணை நடக்கிறது.

பெட்ரோல் பங்க்கில் கள்ள நோட்டு சிக்கிய தகவல் பெருந்துறை முழுவதும் பரவியது. இதனால் அந்த பகுதி வியாபாரிகளும், பொதுமக்களும் அதிர்ச்சி அடைந்தனர்.

கவுந்தப்பாடியில் 2 ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விடும் கும்பல் நடமாட்டம் உள்ளதோ? என்ற அச்சம் அவர்களிடையே நிலவுகிறது. #tamilnews

Similar News