செய்திகள்
முதல்வர்-எதிர்க்கட்சி தலைவர் சந்திப்பு வற்வேற்கத்தக்கது- தா. பாண்டியன் பேச்சு
காவிரி மேலாண்மை குறித்து முதல்வரும் எதிர்கட்சி தலைவரும் சந்திப்பது வரவேற்கதக்கது என்று தா.பாண்டியன் கூறினார்.
ஈரோடு:
ஈரோடு, சூளை சி.என்.சி. கல்லூரியில் தமிழ்துறை சார்பில் இன்று கருத்தரங்கு நடைபெற்றது. கருத்தரங்கில் இந்திய கம்யூனிஸ்ட் தேசிய குழு உறுப்பினர் தா.பாண்டியன் கலந்து கொண்டார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
தஞ்சை பெரிய கோவிலில் சிலைகள் கொள்ளை போனது அதிர்ச்சி அளிக்கிறது. காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக மத்திய அமைச்சர்கள் கருத்து கூறுவது நீதிமன்றத்திற்கு எதிரானது.
வெளிநாட்டில் இருந்து முதலீடுகளை ஈர்ப்பதற்கு பதிலாக நம்நாட்டில் உள்ள வங்கிகளில் கடன் பெற்று வெளிநாடுகளுக்கு கொண்டு செல்வது அவமானமாக உள்ளது.
தமிழகத்திற்கு தேவையான நிதியை மத்திய அரசு இது வரை வழங்கவில்லை. காவிரி மேலாண்மை குறித்து முதல்வரும் எதிர்கட்சி தலைவரும் சந்திப்பது வரவேற்கதக்கது.
இவ்வாறு அவர் பேசினார். #tamilnews