செய்திகள்

கட்டண உயர்வு: சாலை மறியல் போராட்டம் நடத்திய 30 பேர் கைது

Published On 2018-01-22 07:58 GMT   |   Update On 2018-01-22 07:58 GMT
பஸ்கட்டண உயர்வை கண்டித்து சத்தியமங்கலம் பஸ்நிலையம் அருகே மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த 30 பேரை போலீசார் கைது செய்தனர்.
சத்தியமங்கலம்:

தமிழகத்தில் அதிரடியாக பஸ்கட்டணம் உயர்த்தப்பட்டது. திடீர் கட்டண உயர்வால் பொது மக்கள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர்.

பஸ்கட்டண உயர்வை கண்டித்து தமிழகம் முழுவதும் சாலைமறியல் உள்ளிட்ட போராட்டங்கள் நடைபெற்றுவருகின்றன. இந்நிலையில் சத்தியமங்கலம் பஸ்நிலையம் அருகே உள்ள எஸ்பிஎஸ் கார்னரில் கூடிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த 30 பேர் கோவை-மைசூர் கோபி சந்திப்பு சாலையில் திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். கட்டண உயர்வை கண்டித்து கண்டன கோ‌ஷமிட்டனர்.

இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவலறிந்த சத்தியமங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்து வேனில் ஏற்றி தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர். மறியல் காரணமாக தேசிய நெடுஞ்சாலையில் 20 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. #tamilnews
Tags:    

Similar News