செய்திகள்

அ.தி.மு.க.வின் அனைத்து எம்.எல்.ஏ.க்களும் தினகரன் பக்கம் சாய்ந்து விடுவார்கள்: புகழேந்தி

Published On 2017-12-25 15:24 IST   |   Update On 2017-12-25 16:53:00 IST
அ.தி.மு.க.வின் அனைத்து எம்.எல்.ஏ.க்களும் தினகரன் பக்கம் சாய்ந்து விடுவார்கள் என்று தினகரன் ஆதரவாளர் புகழேந்தி கூறியுள்ளார்.

பெங்களூரு:

தினகரன் ஆதரவாளர் புகழேந்தி நிருபரிடம் கூறியதாவது: -

தினகரன் சுயேட்சையாக போட்டியிட்டு இமாலய வெற்றி பெற்று உள்ளார். அவர் மீது பெண்கள் நம்பிக்கை வைத்து வாக்களித்து உள்ளனர். ஜெயலலிதாவின் உண்மையான அரசியல் வாரிசு என்பதை அவர் நிரூபித்து விட்டார். அவருக்கு அ.தி.மு.க. எம்.பி செங்குட்டுவன் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தார். மற்ற அ.தி.மு.க. எம்.எல்.ஏக்கள் அவருக்கு ரகசியமாக வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

விரைவில் அ.தி.மு.க. எம்.எல்.ஏக்கள் அனைவரும் தினகரன் பக்கம் வருவார்கள். சசிகலா ஒப்புதலோடு அவர் சட்டமன்ற புதிய கட்சி தலைவராக தேர்ந்து எடுக்கப்பட்டு முதல்- அமைச்சர் ஆவார். இதற்கானகாலம் கனிந்து வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Similar News