செய்திகள்

எம்.ஜி.ஆர். படித்த கும்பகோணம் பள்ளி தரம் உயர்வு: முதல்-அமைச்சர் அறிவிப்பு

Published On 2017-11-30 07:26 GMT   |   Update On 2017-11-30 07:26 GMT
கும்பகோணத்தில் எம்.ஜி.ஆர். படித்த யானையடி நகராட்சி தொடக்கப்பள்ளி நடுநிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்படும் என்று தஞ்சையில் நடந்த எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி கூறினார்.
தஞ்சாவூர்:

தஞ்சையில் நடந்த எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி  நலத்திட்டங்களை அறிவித்தார்.

கும்பகோணத்தில் எம்.ஜி.ஆர். படித்த யானையடி நகராட்சி தொடக்கப்பள்ளி நடுநிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்படும். அந்த பள்ளிக்கு அவரது பெயர் சூட்டப்படும். அந்த பள்ளியில் சத்துணவு மையம் தொடங்க ஆணையிட்டு சத்துணவு வழங்கப்படுகிறது. அங்கு தனி சமையலறை கட்டப்படும்.

மேலும் கல்லணை கால்வாயை ரூ.2298 கோடி மதிப்பில் புதுப்பிக்க அரசு திட்டமிட்டுள்ளது.

இதேபோல் தஞ்சை மாவட்டத்தில் பல்வேறு திட்டப்பணிகளை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

Tags:    

Similar News