செய்திகள்

எம்.எல்.ஏ.க்கள் எதிர்ப்பு தெரிவிப்பது எனக்கு புதிதல்ல: கவர்னர் கிரண்பேடி பதிலடி

Published On 2017-07-01 08:43 GMT   |   Update On 2017-07-01 08:43 GMT
எம்.எல்.ஏ.க்கள் எதிர்ப்பு தெரிவிப்பது எனக்கு புதிதல்ல, புதுவை வளர்ச்சிக்கு தொடர்ந்து பாடுபடுவேன், என்னுடைய கடமை அது என்று கவர்னர் கிரண்பேடி கூறி உள்ளார்.
புதுச்சேரி:

தூய்மை பணிக்கு எம்.என்.ஆர். பாலன் எம்.எல்.ஏ. எதிர்ப்பு தெரிவித்தது குறித்து கவர்னர் மாளிகையில் நிருபர்கள் கவர்னர் கிரண்பேடியை சந்தித்து கருத்து கேட்டனர். அதற்கு கவர்னர் கிரண்பேடி கூறியதாவது:-

எம்.எல்.ஏ.க்கள் எதிர்ப்பு தெரிவிப்பது எனக்கு புதிதல்ல, புதுவை வளர்ச்சிக்கு தொடர்ந்து பாடுபடுவேன், என்னுடைய கடமை அது. யூனியன் பிரதேசமான புதுவைக்கு 3 நியமன எம்.எல்.ஏக்களை நியமிக்க மத்திய அரசுக்கு அதிகாரம் உள்ளது.

நியமன எம்.எல்.ஏ.க் களை நியமிப்பது தொடர்பாக வரும் தகவல்கள் அனைத்தும் வதந்தியே நியமன எம்.எல்.ஏ.க்கள் தொடர்பான அறிவிப்பு நேரம் வரும்போது தெரிய வரும்.

இவ்வாறு கவர்னர் கிரண்பேடி கூறினார்.

Tags:    

Similar News