செய்திகள்

13 வயது சிறுமிக்கு கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் பெண் குழந்தை பிறந்தது

Published On 2017-06-22 09:50 GMT   |   Update On 2017-06-22 09:50 GMT
பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட 13 வயது சிறுமிக்கு கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் பெண் குழந்தை பிறந்தது குறித்து அதிகாரி விசாரணை நடத்தினார்.
கடலூர்:

கடலூர் மாவட்டம் திட்டக்குடியை பகுதியை சேர்ந்த 13 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதில் கர்ப்பமடைந்தார்.

இது குறித்து அந்த சிறுமியின் தாய் கடலூர் மாவட்ட குழந்தைகள் நலக் குழுவிடம் புகார் செய்தார்.

அதில், எனது கணவர் பாலியல் தொல்லை செய்ததால் என் மகள் கர்ப்பமடைந்துள்ளார் என்று கூறினார்.

நிறைமாத கர்ப்பிணியாக இருந்த அந்த சிறுமியை கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் அவர்கள் சேர்த்தனர். அங்கு அவளுக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது.

இதைத்தொடர்ந்து குழந்தை பெற்ற சிறுமியிடமும், அவரது தாயிடமும் மாவட்ட குழந்தைகள் நல குழு தலைவர் ஜெயந்தி ரவிச்சந்திரன் விசாரணை நடத்தினார்.

அப்போது சிறுமியை கர்ப்பமாக்கியது எனது கணவர் அல்ல. வேறு யாரோ அவளை கர்ப்பிணியாக்கி விட்டனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிகாரியிடம் சிறுமியின் தாய் மாற்றி கூறினார். இதை கேட்ட அதிகாரி அதிர்ச்சி அடைந்தார்.

பிறந்த அந்த பச்சிளம் குழந்தையை அரசு தொட்டில் குழந்தைகள் திட்டத்தில் சேர்க்க நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். மேலும் குழந்தை பெற்ற சிறுமியை விடுதியுடன் கூடிய பள்ளியில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தது யார்? என்று அதிகாரி விசாரித்து வருகிறார்.

இந்த சம்பவம் கடலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Tags:    

Similar News