செய்திகள்

உத்திரமேரூர் அருகே வீட்டின் ஜன்னலை உடைத்து 30 பவுன்-ரூ 1½ லட்சம் கொள்ளை

Published On 2017-04-26 14:47 IST   |   Update On 2017-04-26 14:48:00 IST
உத்திரமேரூர் அருகே வீட்டின் ஜன்னலை உடைத்து நகை, பணம் கொள்ளையடித்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

காஞ்சீபுரம்:

உத்திரமேரூர், கங்கை அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் விசாலாட்சி இவரது கணவர் வெளி நாட்டில் வேலை பார்த்து வருகிறார்.நேற்று இரவு வீட்டை பூட்டி விட்டு விசாலாட்சி, அரசாணி மங்கலத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றார்.

இன்று காலை திரும்பி வந்த போது வீட்டின் ஜன்னலை உடைந்து இருந்தது. பீரோவில் இருந்த 30 பவுன் நகை, ரூ. 1½ லட்சம் ரொக்கம் ½ கிலோ வெள்ளிப் பொருட்களை மர்ம நபர்களை கொள்ளையடித்து சென்று இருப்பது தெரிந்தது.

இதே போல் அருகில் உள்ள கங்கை அம்மன் கோவிலுக்குள் புகுந்த கொள்ளைகும்பல் உண்டியலை உடைத்து பணத்தை சுருட்டி சென்று உள்ளனர். இது குறித்து உத்திரமேரூர் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

Similar News