செய்திகள்

தஞ்சை கிறிஸ்தவ ஆலயங்களில் புனிதவெள்ளி சிறப்பு பிரார்த்தனை

Published On 2017-04-14 19:24 IST   |   Update On 2017-04-14 19:24:00 IST
புனித வெள்ளியான இன்று காலை தஞ்சையில் உள்ள கிறிஸ்தவ ஆலயங்களில் சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றது.

தஞ்சாவூர்:

இயேசு கிறிஸ்து உலக மக்களுக்காக தன்னை தானே அர்ப்பணித்து கொள்ளும் இந்த புனித வெள்ளி நிகழ்வு உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்துவர்களின் துக்க தினமாக இன்று அனுசரிக்கப்படுகிறது.

உலக மக்களுக்காக தன்னை சிலுவையில் பலி கொடுத்து 3ம் நாள் இயேசு உயிர்தெழுவதற்கு முன்பு அவர் சிலுவையில் அறையப்பட்டபோது அவருக்கு ஏற்பட்ட துன்பங்களை திரும்பி பார்க்கும் வகையில் இந்த புனித வெள்ளி அனுசரிக்கப்படுகிறது.

புனித வெள்ளியான இன்று காலை தஞ்சையில் உள்ள கிறிஸ்தவ ஆலயங்களில் சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றது. தஞ்சை குழந்தை இயேசு ஆலயம், மாதாக்கோட்டை சாலையில் உள்ள புனித சகாய லூர்து அன்னை ஆலயம், மேரிஸ் கார்னர் தூய இருதய பேராலயம் உள்ளிட்ட கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெற்றது.

இயேசு சிலுவையில் அறையப்பட்டு சிலுவையிலேயே மரணத்தை எதிர்கொள்ளும் சம்பவத்தை சித்தரிக்கும் வகையில் அனைத்து ஆலயங்களிலும் இன்று சிலுவை பாதை வழிபாடுகள் நடைபெற்றது. இயேசு சிலுவையில் அறையப்பட்டு இறப்பதற்கு முன்பு அவர் பட்ட பாடுகளை நினைவில் கொள்ளும் இந்த புனித வெள்ளி ஈஸ்டர் திருவிழாவின் முன்னோட்டமாகும்.

Similar News