செய்திகள்

புதுப்பெண்ணின் தங்கையை கர்ப்பமாக்கிய புதுமாப்பிள்ளை: போலீசில் புகார்

Published On 2017-03-28 16:20 IST   |   Update On 2017-03-28 16:20:00 IST
மயிலாடுதுறை அருகே புதுப்பெண்ணின் தங்கையை கர்ப்பமாக்கிய புதுமாப்பிள்ளை குறித்து போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து புதுமாப்பிள்ளையை தேடி வருகிறார்கள்.

மயிலாடுதுறை:

மயிலாடுதுறை அருகே உள்ள வழுவூரை சேர்ந்தவர் ராஜேஷ்.இவருக்கும் தரங்கம்பாடி அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த பெண்ணுக்கும் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இந்த நிலையில் ராஜேசின் தாயாருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அவரை பார்த்து கொள்ள பதுப்பெண்ணை ராஜேஷ் அழைத்துள்ளார். ஆனால் பெண்ணின் பெற்றோர் புதுப்பெண் தங்கையை அனுப்பி வைத்துள்ளனர்.

அவரை ராஜேஷ் கட்டாயப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இதில் அவர் கர்ப்பம் அடைந்தார். அரசு மருத்துவமனையில் பரிசோதனை செய்த போது 3 மாத கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது.

இது குறித்து அப்பெண் மயிலாடுதுறை மகளிர் போலீசில் புகார் அளித்தார். இன்ஸ்பெக்டர் ராணி மற்றும் போலீசார் வழக்குபதிவு செய்து புதுமாப்பிள்ளை ராஜேசை தேடி வருகின்றனர்.

Similar News