செய்திகள்
களக்காடு தலையணை திறக்கப்பட்டதால் ஆற்றில் குளியல் நடத்தும் சுற்றுலா பயணிகள்

களக்காடு தலையணை திறக்கப்பட்டதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி

Published On 2017-02-02 10:00 IST   |   Update On 2017-02-02 10:00:00 IST
களக்காடு மேற்கு தொடர்ச்சி மலையில் மழை பெய்ததால் தலையணையில் தண்ணீர் வரத்து ஏற்பட்டது. அதனால் நேற்று தலையணை திறக்கப்பட்டதில் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
களக்காடு:

நெல்லை மாவட்டத்தில் பருவ மழைகள் சரிவர பெய்யவில்லை. கடந்த 7 மாதத்திற்கும் மேலாக மழை இல்லாததால் களக்காடு பகுதியில் வறட்சி நிலவுகிறது. இதுபோல களக்காடு மேற்கு தொடர்ச்சி மலையிலும் மழையின்றி வறட்சி ஏற்பட்டது. அருவி மற்றும் நீர்நிலைகள் வறண்டது. இதனால் வனவிலங்குகள் உணவுக்காக மலையடிவார பகுதிக்குள் புகுந்தன.

தண்ணீர் இன்றி வறட்சி ஏற்பட்டதால் களக்காடு தலையணை கடந்த செப்டம்பர் மாதம் மூடப்பட்டது. தலையணைக்கு தினசரி உள்ளூர் மட்டுமின்றி வெளியூர்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து சென்ற நிலையில் தலையணை மூடப்பட்டதால் சுற்றுலா பயணிகள் கவலை அடைந்தனர்.

காணும் பொங்கல் கொண்டாட்டத்திற்காகவாவது தலையணையை திறக்க கோரிக்கை விடப்பட்டது. ஆனால் வனவிலங்குகள் நடமாட்டத்தை காரணம் காட்டி தலையணையை திறக்க வனத்துறையினர் மறுத்து விட்டனர்.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக களக்காடு மேற்கு தொடர்ச்சி மலையில் மழை பெய்ததால் தலையணையில் தண்ணீர் வரத்து ஏற்பட்டது. இதையடுத்து களக்காடு தலையணையை திறக்க வனத்துறையினர் முடிவு செய்தனர். அதன் படி நேற்று தலையணை திறக்கப்பட்டது. சுற்றுலா பயணிகளுக்கும் அனுமதி வழங்கப்பட்டதால் அவர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.


Similar News