செய்திகள்

நெல்லிக்குப்பத்தில் போலி கையெழுத்து போட்டு மணியார்டர் பணம் கையாடல்: தபால்காரர் மீது வழக்கு

Published On 2017-01-15 16:28 IST   |   Update On 2017-01-15 16:28:00 IST
நெல்லிக்குப்பத்தில் போலி கையெழுத்து போட்டு பொதுமக்களின் பணத்தை தபால்காரர் ரூ.7 ஆயிரம் கையாடல் செய்துள்ளார்.

நெல்லிக்குப்பம்:

கடலூரை அடுத்த நெல்லிக்குப்பம் தபால் நிலையத்தில் பொதுமக்கள் மணியார்டர் செய்யும் பணம் கையாடல் செய்யப்படுவதாக துணை அஞ்சலக ஆய்வாளருக்கு புகார் வந்தது. இந்த புகாரின் பேரில் அஞ்சலக ஆய்வாளர் கணேஷ் நெல்லிக்குப்பம் தபால்நிலையத்தில் ஆய்வு மேற் கொண்டார்.

அப்போது கடந்த 2014-ம் ஆண்டு நவம்பர் 24-ந் தேதி முதல் 2015-ம் ஆண்டு 22-ந் தேதிவரை முதியோர் உதவித்தொகை, மணியாடர் உள்ளிட்ட பொதுமக்களின் பணத்தை தபால்காரர் ராஜேந்திரன் போலியாக கையெழுத்திட்டு ரூ.7 ஆயிரம் கையாடல் செய்தது தெரியவந்தது.

இதுகுறித்து ஆய்வாளர் கணேஷ் நெல்லிக்குப்பம் போலீசில் புகார் செய்தார். இதையொட்டி ராஜேந்திரன் மீது போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News