செய்திகள்
விருத்தாசலம் அருகே பயிர்கள் கருகியதால் விஷம் குடித்து விவசாயி தற்கொலை
விருத்தாசலம் அருகே பயிர்கள் கருகியதால் மனவேதனை அடைந்த விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.
விருத்தாசலம்:
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பொய்த்ததால் பயிர்கள் கருகி வருகின்றன. இதனால் விவசாயிகள் தற்கொலை செய்வதும் மனமுடைந்து இறப்பதும் அதிகரித்து வருகிறது.
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகேயுள்ள கம்மாபுரத்தைச் சேர்ந்தவர் இளங்கோவன் (வயது 52). இவர் அதே பகுதியை சேர்ந்த ராமதுரை என்பவருக்கு சொந்தமான 12 ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு எடுத்து நெல் பயிரிட்டிருந்தார்.
பருவ மழை பொய்த்ததாலும், நிலத்தடி நீர் குறைந்ததாலும், பயிர்கள் கருகின. பயிர்களை காப்பாற்ற முடியவில்லையே என்று இளங்கோவன் மனமுடைந்தார். வாங்கிய கடனை எப்படி அடைக்கப்போகிறோம்? என்ற வேதனையில் விஷம் குடித்து விட்டார்.
மயங்கி விழுந்த அவரை சிகிச்சைக்காக விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலனின்றி இளங்கோவன் பரிதாபமாக இறந்தார்.
அவரது உடலைப் பார்த்து குடும்பத்தினர், உறவினர்கள் கதறி துடித்தது கல்நெஞ்சையும் கரைய வைப்பதாக இருந்தது.