செய்திகள்

எடப்பாடி அருகே கல்லூரி மாணவியை கடத்தி சென்று பலாத்காரம் செய்த வாலிபர் கைது

Published On 2016-12-15 16:37 IST   |   Update On 2016-12-15 16:37:00 IST
எடப்பாடி அருகே ஆசை வார்த்தை கூறி கல்லூரி மாணவியை கடத்தி சென்று பலாத்காரம் செய்த வாலிபரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
எடப்பாடி:

சேலம் மாவட்டம் எடப்பாடியை அடுத்த கொங்கணாபுரம் அருகே உள்ள ரங்கம்பாளையம் பகுதியை சேர்ந்த 17 வயது மாணவி குமாரபாளைம் பகுதியில் இயங்கி வரும் ஓர் தனியார் கலை, அறிவியல் கல்லூரியில் இளங்கலை முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் தினமும் கல்லூரி வாகனத்தில் கல்லூரிக்கு சென்று வந்தார்.

அதே பகுதியை சேர்ந்த அஜித்குமார் (23) என்பவர் சேலத்தில் உள்ள ஓர் தனியார் அட்டை பெட்டி தயாரிக்கும் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். தினமும் மாணவி கல்லூரிக்கு செல்லும் அதே நேரத்தில் அஜித்குமாரும் வேலைக்கு செல்ல பஸ் நிறுத்தத்திற்கு வருவார் மாணவியிடம் நைசாக பேச்சு கொடுத்த அஜித்குமார் அவரிடம் மனதை மயக்கும் விதத்தில் ஆசை வார்த்தை கூறி வந்து உள்ளார்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு அருகில் உள்ள கடைக்கு சென்று வருவதாக கூறி சென்ற மாணவி நெடுநேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை. அக்கம் பக்கம் விசாரித்த அவரது பெற்றோர் தங்கள் மகளை அதே பகுதியை சேர்ந்த அஜித்குமார் ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்று விட்டார் என்று எடப்பாடி காவல் நிலையத்தில் புகார் செய்தனர்.

புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த எடப்பாடி போலீசார் அஜித்குமாரை தீவிரமாக வலைவீசி தேடி வந்தனர். இந்த நிலையில் அஜித்குமார் சேலம் செவ்வாய்ப்போட்டை பகுதியில் மாணவியுடன் மறைந்திருந்ததை கண்டு பிடித்த போலீசார் அஜித் குமாரை பிடித்து தீவிர விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அஜித் குமார் கல்லூரி மாணவியை கடத்தி சென்று பலாத்காரம் செய்த உண்மை தெரிய வந்தது. இதையடுத்து அஜித் குமாரை கைது செய்த போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர் செய்து சிறையில் அடைத்தனர். கல்லூரி மாணவி சேலத்தில் உள்ள பெண்கள் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டார்.

Similar News