செய்திகள்
நெடுந்தீவு அருகே புதுக்கோட்டை மீனவர்களின் விசைப்படகுகள் மீது இலங்கை கடற்படை தாக்குதல்
புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினம் மீனவர்களின் விசைப்படகுகள் மீது தாக்குதல் நடத்தி வலைகளை இலங்கை கடற்படையினர் அறுத்ததால் உயிருக்கு பயந்து மீனவர்கள் பாதியிலேயே கரை திரும்பினர்.
அறந்தாங்கி:
புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினத்தில் இருந்து 196 விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். இந்திய கடல் எல்லையான நெடுந்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்த போது, அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் ஜெகதாப்பட்டினம் மீனவர்கள் வந்த விசைப் படகுகள் மீது கற்களை வீசி தாக்கினர். இதில் சில விசைப்படகுகளின் கண்ணாடி உடைந்து சேதமடைந்தது. மேலும் வலைகளையும் இழுத்து அறுத்தனர்.
இதனால் அதிர்ச்சியடைந்த மீனவர்கள் உயிருக்கு பயந்து மீன்பிடிக்காமல் பாதியிலேயே கரை திரும்பினர். கடலில் போதிய மீன்வளம் இல்லாததாலும், பண பரிமாற்ற பிரச்சினையாலும் சில நாட்களாக கடலுக்கு செல்லாமல் வேலை நிறுத்த போராட்டத்தில் மீனவர்கள் ஈடுபட்டிருந்தனர்.
இந்நிலையில் கடந்த வாரம் தான் மீன்பிடிக்க சென்ற நிலையில் இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்திய சம்பவம் மீனவர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து ஜெகதாப்பட்டினம் விசைப்படகு மீனவர்கள் சங்க துணை தலைவர் ராம தேவன் கூறுகையில், கடலில் மீன்பிடித்த சரவணன் என்பவருடைய விசைப்படகு உள்பட பல விசைப்படகுகளை தாக்கியும், வலைகளை அறுத்தும் இலங்கை கடற்படையினர் சேதப்படுத்தியுள்ளனர்.
பல ஆயிரம் மதிப்புள்ள இந்த வலைகளை மீண்டும் எப்படி வாங்குவது என்று தெரியவில்லை. இந்திய கடல் பகுதியில் போதிய மீன்வளம் இல்லை. சர்வதேச கடல் எல்லையை தாண்டினால் அபராதம் விதிக்கப்படுகிறது. அப்படியே கஷ்டப்பட்டு மீன்பிடித்து வந்தாலும் பணபரிமாற்ற பிரச்சினையால் மீன்களை விற்க முடியவில்லை. இது தொடர்பாக மத்திய மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.