செய்திகள்

கீழ்பவானி வாய்க்காலுக்கு 15 நாட்கள் தொடர்ந்து தண்ணீர் திறந்து விடப்படும்

Published On 2016-10-22 05:09 GMT   |   Update On 2016-10-22 05:09 GMT
கீழ்பவானி வாய்க்காலுக்கு 15 நாட்கள் தொடர்ந்து தண்ணீர் திறக்கப்படும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஈரோடு:

பவானிசாகர் அணையிலிருந்து கீழ்பவானி பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விட வேண்டும் என விவசாயிகள் அரசுக்கு வலியுறுத்தி இருந்தனர்.

ஆனால் அணையில் நீர் இருப்பு மிகவும் குறைவாக இருந்ததால் தண்ணீர் திறக்கப்படாமல் இருந்தது.

இந்த நிலையில் மின்சாரம் தயாரிக்க ஊட்டி மலையில் உள்ள அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டதாலும் மேலும் நீர்பிடிப்பு பகுதியில் பரவலாக மழை பெய்து வருவதாலும் பவானிசாகர் அணைக்கு வினாடிக்கு 1200கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

இதனால் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று அரசு உத்தரவுப்படி பாவனிசாகர் அணையிலிருந்து நேற்று முதல் கீழ்பவானி வாய்க்காலுக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது.

பொதுப்பணித்துறை அதிகாரிகள் மதகை திறந்து தண்ணீரை திறந்து விட்டனர். அப்போது விவசாயிகள் தண்ணீர் மீது மலர் தூவி மகிழ்ச்சி தெரிவித்தனர்.

நேற்று முதல் நாளில் வினாடிக்கு 500 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டது. இன்று முதல் வினாடிக்கு 2300 கன அடி வீதம் மொத்தம் 15 நாட்கள் தண்ணீர் திறக்கப்படும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

கீழ்பவானி வாய்க்காலுக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டதையொட்டி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

திறந்துவிடப்பட்ட இந்த தண்ணீரால் ஈரோடு-திருப்பூர் மாவட்ட விவசாயிகள் பயனடைவார்கள். தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தும்படி பொதுப்பணித்துறை அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

Similar News